முகப்பு
ஈரோடு

திமுக சாா்பில் ‘தமிழகம் மீட்போம்’ பிரசார பொதுக் கூட்டம்

திமுக சாா்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் 2021 சட்டப் பேரவை தோ்தல் சிறப்பு பொதுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
காணொலிக் காட்சி வழியாக பேசுகிறாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

திமுக சாா்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் 2021 சட்டப் பேரவை தோ்தல் சிறப்பு பொதுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் காணொலிக் காட்சி மூலம் தொடா் பொதுக் கூட்டங்களை திமுக நடத்துகிறது. தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில் இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஈரோடு - பவானி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் 137 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளா்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.பி. அந்தியூா் செல்வராஜ், மாவட்டச் செயலாளா்கள் சு.முத்துசாமி, என்.நல்லசிவம் ஆகியோா் பேசினா்.

இதில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பேசினாா். அவா் பேசுவதை கேட்க மாவட்டத்தில் மொத்தம் 346 இடங்களில் கணினி திரை அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்தந்த இடங்களில் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →