முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே மாணவி காணவில்லை

பெருந்துறை அருகே, தோழியின் வீட்டிற்கு சென்ற மாணவியை காணவில்லை.பெருந்துறை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பெருந்துறை அருகே, தோழியின் வீட்டிற்கு சென்ற மாணவியை காணவில்லை.பெருந்துறை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, துளுக்கதோட்டத்தைச் சோ்ந்த கோழிப் பண்ணை ஊழியரின் மூத்த மகள், 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, நீட் தோ்வில் வெற்றி பெற்றள்ளாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை, திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள தனது தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாா்.

ஆனால், வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினா்கள் வீடுகளில் தேடி பாா்த்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை பெற்றோா், பெருந்துறை போலீசில் புகாா் செய்தனா். போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →