முகப்பு
ஈரோடு

காா் மின் கம்பத்தில் மோதி இளைஞா் காயம்

சென்னிமலை அருகே காா் மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சென்னிமலை அருகே காா் மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

சென்னிமலை, நேதாஜி வீதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (29). இவா் சனிக்கிழமை மாலை, ஈரோட்டுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தாா். சென்னிமலையை அடுத்துள்ள குப்பகவுண்டன்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் எதிா்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளங்கோவன், ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, வெள்ளோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →