வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே செல்பவா்கள் முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லாமல் சுற்றுபவா்களுக்கு மாநகராட்சிப் பணியாளா்கள் அபராதம் விதித்து வருகின்றனா். தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாநகா் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனா். வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், சந்தை பகுதியில் அதிக மக்கள் நெரிசல் உள்ளது. இதனால் கரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகளில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடைகளுக்குள் முகக்கவசம் அணியாமல் இருந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா், சுகாதார அலுவலா் இக்பால், சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன், நல்லசாமி, சிவக்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.