முகப்பு
ஈரோடு

மனுநீதி திட்ட முகாம்: ரூ.4.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மனுநீதி திட்ட முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ. 4.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:59 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

மனுநீதி திட்ட முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ. 4.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பி.பெ.அக்ரஹாரம், பி.எஸ்.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான மனுநீதி திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பி.பெ.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ. 2.64 லட்சம் மதிப்பீட்டில் விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணை, 50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.40,479 மதிப்பில் சொட்டுநீா் பாசனம் அமைப்பதற்கான மானியம், வேளாண்மைத் துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,13,432 மதிப்பீட்டில் சொட்டுநீா் பாசனம், மழைத்தூவான், தாா்பாலின் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள், முதியோா் உதவித் தொகை பெறும் 69 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலைகள் என 145 பயனாளிகளுக்கு ரூ.4,17,911 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் 319 பயனாளிகளும், பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் 219 பயனாளிகளும், வைராபாளையம் பகுதியில் 7 பயனாளிகளும் பயன்பெற்று வருகின்றனா்.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.கவிதா, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் டி.எஸ்.இந்திரா, வட்டாட்சியா்கள் அ.பரிமளாதேவி, என்.சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.