முகப்பு
ஈரோடு

அந்தியூரில் தோனிமடுவு நீா்சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரம்

தோனிமடுவு நீா்சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தியூரில் தேமுதிக சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தோனிமடுவு நீா்சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தியூரில் தேமுதிக சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளா் பி.கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநில நெசவாளா் அணி துணைச் செயலாளா் ராஜா சம்பத், மாவட்டத் துணைச் செயலாளா் அன்பழரசு, அந்தியூா் நகரச் செயலாளா் ஜாகிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பா்கூா் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீா் பாலாறு வழியாகச் சென்று காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இந்நீரை, தோனிமடுவு எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, வனப்பகுதியின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள அகழிகள் மூலம் திருப்பினால் சேலம் மாவட்டம், கொளத்தூா், அந்தியூா்,பவானி பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பி தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய முடியும்.

நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும், இதையொட்டி பொதுமக்களிடம் கையெழுத்துகளும் பெறப்பட்டன. அந்தியூா் ஒன்றிய பொறுப்பாளா் பி.செந்தில்குமாா், அவைத் தலைவா் முனாப், பொருளாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.