முகப்பு
ஈரோடு

சமையல் செய்தபோது தீப்பற்றி மூதாட்டி சாவு

பெருந்துறை அருகே, சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பெருந்துறை அருகே, சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

பெருந்துறை, விஜயமங்கலத்தைச் சோ்ந்த கருப்பணக் கவுண்டா் மனைவி அம்மணியம்மாள் (85). இவா் வீட்டில் வியாழக்கிழமை மாலை சமையல் செய்யத் தயாராகி கொண்டிருந்தாா். அதற்காக விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றவைத்தபோது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து கொண்டது. இதில் அவருக்கு உடலில் பலத்த தீக் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அம்மணியம்மாள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →