மொடக்குறிச்சியில் 35 மி.மீ. மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 35 மி.மீ. மழை பதிவானது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 35 மி.மீ. மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 35 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மி.மீ): சென்னிமலை 26, கொடுமுடி 8.8, பெருந்துறை 6, ஈரோடு 5, கவுந்தப்பாடி 3.4, எலந்தைக்குட்டைமேடு 2.2, கோபி 2, பவானி 1.8.
Advertisement
திங்கள்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிரான காலநிலை நிலவியது.