ஈரோடு

பவானிசாகர் அணை அருகே ஒற்றை யானை: வனத்துறை கண்காணிப்பு

DIN

பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கீழ்பவானிவாய்க்கால் வழியாக விளாமுண்டி வனத்துக்குள் சென்றது. மீண்டும் ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றையானை, புங்கார் காலனியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. அங்கு சாகுபடி செய்த கரும்புதோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. கிராமமக்கள் பட்டாசுகள் வெடித்து துரத்தியதில், யானை கீழ்பவானி வாய்க்கால் வழியாக விளாமுண்டி காட்டுக்குள் சென்றது. 

இதனால் இரு தினங்களாக மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரத்துவங்கினர். தற்போது மீண்டும் புங்கார் காலனிக்கு யானை வராதபடி வனத்துறையினர் குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக வனத்துறையினர் சாலையில் முகாமிட்டு அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT