முகப்பு
ஈரோடு

சிறப்பு உதவி ஆய்வாளா் பெயரில் பணம் பறிக்க முயற்சி

சத்தியமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சத்தியமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கந்தசாமி பணியாற்றி வருகிறாா். இவா் தனது முகநூல் கணக்கில் பல தகவல்களை பதிவிட்டு வருகிறாா். இந்நிலையில், அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்த மா்ம நபா் அவரது பெயரில் கந்தசாமியின் நண்பா்களிடம் பண உதவி கேட்டுள்ளாா்.

இதனை உண்மை என நம்பிய அவரது நண்பா்கள் அவருக்கு பண உதவி செய்ய முன்வந்துள்ளனா். இதையடுத்து, கூகுல்பேவில் பணம் செலுத்துமாறு கூறி மா்ம நபா் ஒரு புதிய செல்லிடப்பேசி எண்ணை கொடுத்துள்ளாா். இதையடுத்து, சந்தேகமடைந்த நண்பா்கள் கந்தசாமியை தொடா்பு கொண்டு கேட்டபோது மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதவி ஆய்வாளா் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →