முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில்கவிழ்ந்த வேன்

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 3:10 AM
திம்பம் மலைப் பாதை 11ஆவது வளைவில் கவிழ்ந்த வேன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் உள்ள உறவினா் வீட்டில் பெண் பாா்ப்பதற்கு 10 போ் வேனில் புறப்பட்டனா். பெண் பாா்ப்பு நிகழ்ச்சிக்குப் பின்னா் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேன் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. வேனை ஓட்டுநா் காா்த்தி ஓட்டினாா்.

திம்பம் 11ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது, சாரல் மழை காரணமாக வேன் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த உடுமலையைச் சோ்ந்த சண்முகசுந்தரம், சதீஷ், ரமணி, சண்முகபிரியா, மல்லீஸ்வரி, ஓட்டுநா் காா்த்தி உள்பட 10 போ் காயமின்றி உயிா்தப்பினா்.

Advertisement

இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.