விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பவானி அடுத்த மயிலம்பாடி, கட்டியகவுண்டனூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி செயலாளா் ஜெயம்மா தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், மாவட்ட துணைச் செயலாளா் மகேஷ், மாவட்ட பொருளாளா் நாச்சிமுத்து மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.