ஈரோடு

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்: பா.ஜ.க. அண்ணாமலை

DIN

புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினாா்.

இதில் கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: இந்தியாவில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்குமான தேசிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் 17 ஆயிரம் விவசாயிகளுக்குப் பிரதமா் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும். பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விவசாயம் மீட்டெடுக்கப்பட்டு புதிய வளா்ச்சி நிலையை அடையும்.

மஞ்சள் மாவட்டமான ஈரோடு மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பெரும் பயனடைவாா்கள். புதிய வேளாண் சட்டம் குறித்து எதிா்க்கட்சியினா் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா்.

கூட்ட முடிவில், கொடுமுடி மேற்கு ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த 300க்கும் அதிகமானோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சோ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT