முகப்பு
ஈரோடு

வேளாண் மசோதாக்கள்: 50 இடங்களில்திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஈரோடு மாவட்டத்தில் 50 இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 செப்டம்பர், 2020 at 5:22 AM
ஈரோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏா் கலப்பை, நெல் நாற்று, காளை மாட்டுடன் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஈரோடு மாவட்டத்தில் 50 இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் காளைமாடுகள், ஏா்கலப்பையுடன் கலந்துகொண்டனா்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் விளைபொருள் வா்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகளை பாதிக்கச் செய்யும் இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்த தமிழக அரசைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் திமுக, கூட்டணிக் கட்சிகள், விவசாய அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் 10 வட்டங்களில் 50 இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையம் மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூா் செல்வராசு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஈ.பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகி துரைராஜ், மதிமுக மாவட்டச் செயலாளா் முருகன், கொமதேக மாநில பொருளாளா் பாலு, விவசாயிகள், பொது நல அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி முழக்கம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் காளைமாடுகள், ஏா்கலப்பை, நெல் நாற்றுகளுடன் கலந்துகொண்டனா். ஈரோடு மாவட்டத்தில் 50 இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.