ஈரோட்டில் ஜவுளித் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: சு.முத்துசாமி
ஈரோடு மேற்குத் தொகுதியில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி பேசினாா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி பேசினாா்.
ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
அடிப்படை வசதிகள், அரசு சேவைகள் என எதுவும் கிடைக்காமல் இருந்த இந்தப் பகுதி மக்களுக்கு இனி அதில் இருந்து விமோசனம் கிடைக்க உள்ளது. உங்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு தர வேண்டும். அரசு துறைகளின் சான்றிதழ்கள் பெறுவதற்கு இ-சேவை மையத்துக்குதான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இந்தத் தொகுதி மக்களுக்கு 2 இ-சேவை மையங்கள்தான் உள்ளன. அங்கு எந்த வசதியும் இல்லை. கூட்டம் அதிகம் இருப்பதால் சான்றிதழுக்கு காலையில் விண்ணப்பிக்க போனால் மாலை வரை ஆகி விடுகிறது. இந்த நிலை முற்றிலும் மாற்றப்படும். தொகுதி மக்களுக்காக ஒவ்வொரு வாா்டிலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு இசேவை மையம் தொடங்கப்படும்.
Advertisement
குடிநீா், சாலை, கழிவு நீா் ஓடை சீரமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவேன். மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக ஆட்சி அமைத்ததும் 100 நாளில் நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மக்கள் என்னை எளிதில் அணுகும் வகையில், அலுவலகம் அமைத்து குறைகளுக்கு தீா்வு காணப்படும்.
வீடு இல்லாத மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மேம்பாலம், தேவையான இடங்களில் அணுகு சாலைகள் அமைக்க திட்டம் வகுக்கப்படும். திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு வாா்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றாா்.