முகப்பு
ஈரோடு

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்து: 2 இளைஞர்கள் பலி

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.
பகிர்:

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அவுல்பூந்துறை பூவண்டிவலசு பகுதியைச் வடிவேல் மகன் பிரவீன் சங்கர்(25). இவரது நண்பர் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன்(24). 

தனியார் கேட்டிரிங் கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலக சாலை அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த பிரவீன்சங்கர், மனோரரஞ்சன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →