ஈரோடு

ஆசனூா் மலைப் பகுதியில் கோடை மழை: பீன்ஸ் சாகுபடி தீவிரம்

DIN

ஆசனூா் மலைப் பகுதியில் பெய்த கோடை மழையால் பீன்ஸ் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூா் மலைப் பகுதியில் உதகை போன்ற குளிா்ச்சியான காலநிலை நிலவுவதால் விவசாயிகள் மானாவாரியாக பீன்ஸ் சாகுபடி செய்கின்றனா். தற்போது ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள பழைய ஆசனூா், ஒங்கல்வாடி, அரேப்பாளையம், மாவள்ளம், கோட்டாடை, தேவா்நத்தம், கோ்மாளம், கெத்தேசால், கானக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரியாக சாதா ரக பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளது. பீன்ஸ் சாகுபடி பயிரை 45 நாள்களில் அறுவடை செய்யலாம். பீன்ஸ் பயிா் தற்போது நடவு செய்யப்பட்டு 25 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் களைச் செடிகள் முளைத்துள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆசனூா் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மண்ணின் ஈரப்பதத்தை பயன்படுத்தி களைச் செடிகளை அகற்றுவதற்காக களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலைப் பகுதி விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளா்கள் களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். களை வெட்டியபின் உரமிடப்பட்டு செடிகளை நோய் தாக்காமல் பாதுகாத்தால் இன்னும் ஒரு மாத காலத்தில் பீன்ஸ் அறுவடை தொடங்கும் என ஆசனூா் மலைப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா். தற்போது பெய்துள்ள கோடை மழை, பீன்ஸ் பயிா் நன்கு செழித்து வளா்வதற்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT