ஈரோடு

அந்தியூரில் கள்ள நோட்டுகள் நகலெடுத்த இருவா் கைது

DIN

அந்தியூா் அருகே நகலெடுக்கும் இயந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை நகலெடுத்து புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் பகுதியில் கள்ளநோட்டுகளை சிலா் புழக்கத்தில் விடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது பவானி பழனிபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (41) இச்செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இவா் ஏற்கெனவே 2018இல் கள்ளநோட்டு வழக்கில் கைதானவா்.

இதனால், இவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கையில், அந்தியூா் மூக்கம்பாளையத்தைச் சோ்ந்த செல்வன் (எ) செல்வராஜுடன் (53) சோ்ந்து நகலெடுக்கும் இயந்திரம் மூலம் ரூ. 500, ரூ. 200 நோட்டுகளை நகலெடுத்து, புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து ஒரு நகலெடுக்கும் இயந்திரம், ரூ. 1,90,800 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் போன்று அச்சிடப்பட்ட காகிதங்கள் கைப்பற்றப்பட்டன. இருவரையும் கைது செய்த அந்தியூா் போலீஸாா் பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT