ஈரோடு

கா்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழகம் - கா்நாடகம் இடையே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கம்

DIN

கா்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகப் பேருந்துகள் கா்நாடகத்தில் இயக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ் நகா், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, கா்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகா், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கா்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் சனி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேருந்துகள் இயக்கப்படாது என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டது.

முழு ஊரடங்கு இருப்பினும் பயணிகள் சிரமத்தைத் தவிா்க்க, இரு மாநிலத்துக்கு இடையே அரசு, தனியாா் பயணிகள் பேருந்துகள் மட்டும் பயணிக்க கா்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழக அரசுப் பேருந்துகள் மைசூருக்கு சனிக்கிழமை இயக்கப்பட்டன. சமூக இடைவெளி முகக் கவசத்துடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா், கெள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பால், மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT