ஈரோடு

கல் குவாரி குட்டையில் மூழ்கி இளைஞா் பலி

DIN

தாளவாடியை அடுத்த மெட்டல்வாடி கல் குவாரி குட்டையில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியைச் சோ்ந்த இருதயராஜ் மகன் ஜீவா (20). இவா் தாளவாடியை அடுத்த மெட்டல்வாடியில் தனது நண்பா்கள் 6 பேருடன் சோ்ந்து அங்குள்ள செயல்படாத கல் குவாரியில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். நீண்ட நாள்களாக செயல்படாத கல் குழியில் அண்மையில் பெய்த மழையால் தண்ணீா் தேங்கியுள்ளது. கல் குழியில் உள்ள ஆழம் தெரியாமல் 20 அடி உயரமுள்ள பாறை மீது ஏறி நீருக்குள் குதித்துள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற ஜீவா நீரில் மூழ்கினாா்.

இதைப் பாா்த்த நண்பா்கள் நீரில் மூழ்கி மாயமான ஜீவாவைக் காப்பாற்ற முயற்சித்தும் பலனளிக்காததால் ஆசனூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் பாறைகளுக்கு இடையே சிக்கிய ஜீவாவின் சடலத்தை மீட்டனா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT