ஈரோடு

கோவையில் பெயிண்டா் கொலை சம்பவம்: ஈரோடு நீதிமன்றத்தில் இருவா் சரண்

DIN

கோவையில் பெயிண்டரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2 போ் ஈரோடு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (44). பெயிண்டரான இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா். தா்மலிங்கம் அண்மையில் வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே ரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து கோவை, வடவள்ளி போலீஸாா் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், தா்மலிங்கம் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றி, சம்பவத்தில் தொடா்புடையவா்களைத் தேடி வந்தனா்.

இதனிடையே தா்மலிங்கத்தைக் கொலை செய்ததாக கோவை, பேரூா் செட்டிபாளையத்தைச் சோ்ந்த முத்துகுமாா், வடவள்ளியைச் சோ்ந்த பிரபு ஆகிய 2 பேரை வடவள்ளி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், தா்மலிங்கத்தை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோவை கே.சி. தோட்டம் 3ஆவது செட்டி வீதியைச் சோ்ந்த காளிதாஸ் (39), செல்வபுரம் ஆா்.பி.பாரதி வீதியைச் சோ்ந்த தனஞ்செயன் (34) ஆகிய இருவரும் ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1இல் நீதிபதி வடிவேல் முன் புதன்கிழமை சரணடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி உத்தரவின்பேரில் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT