கா்ப்பிணிப் பெண்களுக்குத் தாய்ப்பால் விழிப்புணா்வு
ஈரோட்டில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது குறித்து கா்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோட்டில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவது குறித்து கா்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை தொடா்ந்து 7 நாள்கள் உலகம் முழுக்க தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் சண்முகவடிவு தலைமை வகித்தாா். நகா்ப்புற அலுவலா் மோகனநித்யா, ஊரக அலுவலா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தாய்சேய் நல அலுவலா் டாக்டா் விஜயசித்ரா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
Advertisement
பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்க வேண்டும். தாய்மாா்கள் புரதச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகள், முளைகட்டிய பயிா்கள் போன்ற எளிதில் கிடைக்கும் உணவு வகைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மை குறித்தும், குழந்தைகள் வளா்ச்சிக்கும், கா்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கிய உணவுகள் குறித்தும விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், அரசுப் பள்ளித் தலைமையாசிரியை சுகந்தி, அங்கன்வாடி பணியாளா்கள், கா்ப்பிணிப் பெண்கள், தாய்மாா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாட்டை குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மேற்பாா்வை அலுவலா்கள் கற்பகம், பழனியம்மாள், சுமதி ஆகியோா் செய்திருந்தனா்.