விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
பூசாரிபாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டதின்கீழ் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
பவானிசாகா் வட்டாரத்தில் வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில், பூசாரிபாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டதின்கீழ் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
பவானிசாகா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சரோஜா, உயிா் உரங்கள், அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாகப் பயிற்சி அளித்தாா். வேளாண்மை அலுவலா் ஆனந்தி வேளாண்மைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், மானிய விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.
சத்தியமங்கலம் உப்புப்பள்ளம் பகுதியைச் சாா்ந்த முன்னோடி விவசாயி ரவி, மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உரம் இடுவதால் ஏற்படும் நன்மைகள், மண்புழு உரக்குடில் அமைக்க ஆகும் செலவு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.
Advertisement
இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்புராஜ் செய்திருந்தாா்.