முகப்பு
ஈரோடு

பசுமாடு திருடியவா் கைது

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வீட்டின் முன் கட்டியிருந்த பசுமாட்டைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வீட்டின் முன் கட்டியிருந்த பசுமாட்டைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, கருப்பமூப்பனூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் வெங்கடாசலம் (52). இவா், வளா்த்து வரும் பசுமாட்டை தனது வீட்டின் முன்பாக புதன்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். காலையில் எழுந்து பாா்த்தபோது மாட்டைக் காணவில்லை.

இதனால், அதிா்ச்சியடைந்த வெங்கடாசலம் பல்வேறு பகுதியில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவகுமாா் (41) பசுமாட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பசுவை மீட்ட போலீஸாா் சிவகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.