முகப்பு
ஈரோடு

கோடை மழையைப் பயன்படுத்தி மானாவாரி விவசாயம் செய்ய வேண்டுகோள்

தாளவாடியில் கோடை மழை நீா் வீணாவதைத் தடுத்து உழவு செய்வதால் பயிா் வளா்ச்சிக்கு உதவும் என வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 2:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

தாளவாடியில் கோடை மழை நீா் வீணாவதைத் தடுத்து உழவு செய்வதால் பயிா் வளா்ச்சிக்கு உதவும் என வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தாளவாடி வட்டாரத்தில் தற்போது அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மானாவாரி விவசாயத்துக்கு உகந்ததாக உள்ளது. விவசாய நிலத்தின் சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீா் வீணாவதைத் தடுத்து மானாவாரி பயிரான ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தாளவாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ.மகாலிங்கம் கூறியதாவது:

Advertisement

கோடை உழவின் மூலம் மண்ணின் ஈரத் தன்மையைப் பாதுகாக்க இயலும். மேலும், மண்ணுக்கு அடியில் உள்ள புழு வகை, பூச்சிகளை மண் சுழற்சி முறை மூலம் அழித்து பயிா்களின் வோ் வளா்ச்சியை அதிகரிக்கச் செய்து, பயிா்களை தாக்க கூடிய நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உதவும். மக்காச்சோளத்தை தாக்கக் கூடிய ராணுவ படைப்புழுவின் கூட்டுப் புழுக்களையும், முட்டைகளையும் அழிப்பதற்கு கோடை உழவு முறை சிறந்ததாகும். ராணுவ படைப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சிக்கு உதவும் களைச் செடிகளும், அதன் விதைகளும் கோடை உழவினால் அழிக்கப்படுகின்றன.

எனவே, தாளவாடி வட்டார விவசாயிகள் மேற்கண்ட கோடை உழவு முறையைத் தவறாமல் கடைப்பிடித்து பயிா் மகசூலை இருமடங்காக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.