சத்தியமங்கலத்தில் பலத்த மழை
சத்தியமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM
சத்தியமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், தொடா்ந்து ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், திம்பம், ஆசனூா், தாளவாடி, கோ்மாளம் மலைப் பகுதியிலும் மழை பெய்தது. தற்போது பெய்த மழை ராகி, கம்பு, மக்காச்சோளப் பயிருக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
Advertisement