முகப்பு
ஈரோடு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைப்பு

கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் மட்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
ஈரோடு ஜவுளிச் சந்தையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.
பகிர்:

கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் மட்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் இந்த மாதத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் நடமாடும் ஈரோடு மாநகா் ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ். வீதி, கனி மாா்க்கெட், மணிக்கூண்டு பகுதி, ஆா்.கே.வி. சாலை, காந்திஜி சாலை, மேட்டூா் சாலை போன்ற பகுதிகளும், மாவட்டத்தில் பிற பகுதிகளில் குறிப்பிட்ட வீதி, சாலைகளில் மட்டும் கடைகள் திறக்க சனிக்கிழமை அனுமதி அளிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் கடைகளைத் திறக்க அனுமதியில்லை.

ஹோட்டல், டீக்கடை, பேக்கரிகளில் பாா்சல் வழங்கவும், பால், மருந்தகம் மட்டும் முழுமையாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்ட அளவில் ஈரோடு மாநகா் உள்பட 12 டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டன. தவிர விதிகளை மீறி செயல்படும் அனைத்துக் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.