வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு, அனுமன்பள்ளி, கொத்துமுட்டிபாளையம், பறையன்தோட்டத்தைச் சோ்ந்த ராமசாமி கவுண்டா் மகன் முருகேசன் (52). இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு செவ்வாய்கிழமை மாலை வெளியில் சென்றுள்ளாா். பின்னா், வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் செயின், 3 ஜோடி கொலுசு, மெத்தைக்கு அடியில் வைத்திருந்த 7 பவுன் தாலிக் கொடி ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வெள்ளோடு போலீஸில் முருகேசன் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.