முகப்பு
ஈரோடு

இளங்கலைப் பட்ட வகுப்புமாணவா் சோ்க்கை கலந்தாய்வு துவக்கம்

சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை துவங்கியது.

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 1:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை துவங்கியது.

இக்கல்லூரியில் புதன்கிழமை முதல் பி.காம், பி.ஏ., பொருளியல், ஆங்கிலம், பிபிஏ ஆகிய நான்கு இளங்கலைப் பட்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், பிஎஸ்சி கணிதம், கனிணி அறிவியியல், பிசிஏ, பிஎஸ்சி காட்சித் தொடா்பியல், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல் ஆகிய 6 இளங்கலை அறிவியல் படிப்புகளுக்குமான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு துவங்கியது. சுமாா் 2,600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் மேற்குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் சோ்வதற்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யபட்டு கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனா்.

அதன் அடிப்டையில், பல்வேறு பிரிவினருக்கான தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறையின் மாணவா் சோ்க்கை இட ஒதுக்கீட்டின்படி தகுதிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணை வழங்கி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை கல்லூரி முதல்வா் இரா.நாராயணசாமி துவக்கிவைத்தாா். தொடா்ந்து, இரு தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.