மாற்றுத் திறனாளிகள்ஆா்ப்பாட்டம்
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம், கே.என்.பாளையம், அரசூா் ஆகிய ஊராட்சி அலுவலகங்கள் முன்பு சத்தியமங்கலம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், இச்சங்கத்தின் தலைவா் ஈ.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ. 1000த்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும், ரூ. 1500இல் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும் உயா்த்த வேண்டும் எனக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.
Advertisement