முகப்பு
ஈரோடு

கடன் தொல்லை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தற்கொலை

பவானி அருகே கடன் தொல்லையால் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பவானி அருகே கடன் தொல்லையால் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம், விநாயகா நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (55). இவா், குறிச்சி, பெரியாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சித்ரா (51), ஏமம்பாளையம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளாா்.

பாஸ்கரன் தனது குடும்பத் தேவைகளுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளாா். கடனும், வட்டியும் அதிகரித்த நிலையில் கடனைக் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளாா். இதனால், பாஸ்கரன் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்ட உறவினா்கள் பாஸ்கரனை மீட்டு பவானியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பாஸ்கரன் உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.