முகப்பு
ஈரோடு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவா் பி.கருப்பணன், கல்லூரிச் செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன், கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு விருந்தினராக ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினா் டி.எஸ்.திருமூா்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், முதலாமாண்டு மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை பிரபாவதி, உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.