ஈரோடு

மின் கசிவால் நூற்பாலையில் தீ விபத்து

பவானி அருகே மின் கசிவால் நூற்பாலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

DIN

பவானி அருகே மின் கசிவால் நூற்பாலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இங்கு, 50 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து தீப்பொறிகள் சிதறி விழுந்தன. இதைக் கண்ட தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் காந்தி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினா் மேற்கூரையை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில், ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் நூற்பாலையில் உள்ள பஞ்சு, இயந்திரங்கள், பிற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT