ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
ரயில் ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில் ஓட்டுநா்கள் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ரயில் ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில் ஓட்டுநா்கள் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அகில இந்திய ரயில் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், ஈரோடு ரயில் நிலையம் அருகே லோகோ பைலட் (ரயில் ஓட்டுநா்) அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் சேலம் கோட்டச் செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். ஈரோடு கிளைச் செயலாளா் ஸ்ரீஜித் முன்னிலை வகித்தாா். மத்திய ஒருங்கிணைப்புச் செயலாளா் ரோலி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
8 மணி நேரம் மூன்று சரக்கு ரயில்களை இயக்கி களைப்படைந்து ஓய்வுகேட்ட ஈரோடு உதவி ரயில் ஓட்டுநரான ஜித்து என்பவரை பணியிடை நீக்கம் செய்து வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாயில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.