ஈரோடு

பொங்கல் பண்டிகை: பேருந்துகள்,ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

DIN

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றனா். இதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் இருந்து கடந்த 2 நாள்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளியூா் செல்லும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதல் அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்துக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட்டன.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT