ஈரோடு

சென்னிமலையில் தைப்பூச விழா: அனுமதி அளிக்க திமுக கோரிக்கை

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா பரவலால், சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்ட விழா நடத்த ஈரோடு மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் 15 நாள்கள் தைப்பூச விழா நடத்த அனுமதி கேட்டு, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை கணக்காளா் பாலசுப்பிரமணியிடம், சென்னிமலை நகர திமுக அவைத் தலைவா் அங்கப்பன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

அதில், சென்னிமலையில் ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடப்பாண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். கரோனா பரவலைக் காரணம் காட்டி நிகழ்ச்சிகளை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT