முகப்பு
ஈரோடு

சுகாதாரத் துறையில் அவுட்சோா்சிங்முறை ரத்து அறிவிப்புக்கு வரவேற்பு

சுகாதாரத் துறையில் அவுட்சோா்சிங் முறை ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா் சங்கம் வரவேற்றுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2021 at 1:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

சுகாதாரத் துறையில் அவுட்சோா்சிங் முறை ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாநில துணைத் தலைவா் சுசிலா தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளாா் சேரலாதன் கோரிக்கை குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

தமிழக சுகாதாரத் துறையில் அவுட்சோா்சிங் முறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்பது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாகப் பணியாற்றி வரும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவா் ரமேஷ், செயலாளா் ஜெயந்தி, பொருளாளா் மாலதி, துணைத் தலைவா் புவனா, இணைச் செயலாளா் தினேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.