ஈரோடு

விசைத்தறி பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

விசைத்தறி நெசவு குறித்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோட்டில் விசைத்தறி சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் மூலம் இயங்கும் இச்சேவை மையத்தில் அடிப்படை விசைத்தறி பயிற்சி அளிக்கத் தேவையான சாதா விசைத்தறி, டாபி, டொ்ரி தறிகள் நிறுவப்பட்டுள்ளன.

2/118, ஏ, ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, ஈரோடு 638009 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் விசைத்தறி சேவை மையத்தில் ஜூலை 26ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு விசைத்தறி நெசவு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை ஜூலை 19ஆம் தேதி துவங்குகிறது. கூடுதல் விவரம் அறிய 0424-2271357 என்ற தொலைபேசி எண், 98945-08433, 99430-33493 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சேவை மைய உதவி இயக்குநா் தெ.ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT