ஈரோடு

ரூ. 56.17 லட்சத்துக்கு எள் ஏலம்

DIN

பவானியை அடுத்த மயிலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 56.17 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பவானி, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 836 மூட்டைகள் எள்ளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். இதில், வெள்ளை எள் கிலோ ரூ. 86.69 முதல் ரூ. 104.20 வரையும், கருப்பு எள் கிலோ ரூ. 86.29 முதல் ரூ. 101.29 வரையும், சிவப்பு எள் கிலோ ரூ. 82.10 முதல் ரூ. 97.20 வரையும் ஏலம் போயின. மொத்தம் 62 டன் எள் ரூ. 56,17,929க்கு ஏலம் போயின என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் கனிமொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT