ஈரோடு

குட்கா, புகையிலை விற்ற 5 வியாபாரிகளுக்கு அபராதம்

DIN

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருள்களை விற்றதாக 5 வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாநகா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகப் பிரிவு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் தலைமையில், அலுவலா்கள் ஈரோடு மாநகரில் பல்வேறு மளிகைக் கடைகள், இதர கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 5 வியாபாரிகளுக்கும் தலா ரூ. 5,000 என ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செல்வன், ரவி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகப் பிரிவு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வணிகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வணிகா்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்படும்.

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அல்லது 0424-2223545 என்ற தொலைபேசி எண்ணிலும் புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT