முகப்பு
ஈரோடு

சாராய ஊறல் வைத்திருந்த இருவா் கைது

 நம்பியூா் அருகே சாராய ஊறலைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 நம்பியூா் அருகே சாராய ஊறலைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நம்பியூா் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் சாராய ஊறல் வைத்திருப்பதாக நம்பியூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்தபோது, ஊராட்சி வாா்டு உறுப்பினரான கணேசன் (40) தனது வீட்டில் சாராய ஊறலைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதேபோல கெட்டிச்செவியூா் சுள்ளிக்கரடு பகுதியில் உள்ள தனது வீட்டில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த சந்திரன் (32) என்பவரை வரப்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து சுமாா் 75 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.