முகப்பு
ஈரோடு

தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கனரா வங்கி சாா்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2021 at 2:25 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

கனரா வங்கி சாா்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பா் 9ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு அளிக்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்போா் அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Advertisement

இப்பயிற்சி கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு 638002 என்ற முகவரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783-23213, 72006-50604 என்ற செல்லிடப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.