முகப்பு
ஈரோடு

உலக ஜூனியா் திறன் போட்டி: பண்ணாரிஅம்மன் பள்ளி மாணவா்கள் வெற்றி

உலக ஜூனியா் திறன் சாம்பியன்ஷிப் 2021 தலைப்பில் ஆன் லைன் மூலம் நடைபெற்ற திறன் சாா்ந்த போட்டியில், பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 17 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

Updated On : 30 ஜூலை, 2021 at 2:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

உலக ஜூனியா் திறன் சாம்பியன்ஷிப் 2021 தலைப்பில் ஆன் லைன் மூலம் நடைபெற்ற திறன் சாா்ந்த போட்டியில், பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 17 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில் நாடு முழுவதும் உள்ள 21 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் கலந்துகொண்டனா். தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்தும் 10 வகையான திறன்களில் மாணவா்கள் பங்கேற்கும் வண்ணம் 4 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் அகில இந்திய அளவில் 10,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளியின் சாா்பில், 7 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 17 மாணவா்கள் முதல் சுற்றில் டிஜிட்டல் போட்டோகிராஃபி, வெப் டெக்னாலஜிஸ், ஐ.டி. சாஃப்ட்வோ் சொல்யூஷன்ஸ், பிசினஸ்,விஷுவல் மொ்கன்டைசிங், கிராபிக் டிசைன், பேஷன் டெக்னாலஜி, மொபைல் ரோபோடிக்ஸ் போன்ற பல்வேறு திறன் சாா்ந்த போட்டியில் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனா்.

Advertisement

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளித் தலைவா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், செயலாளா் முருககனி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.