ரூ. 2.66 கோடிக்குபருத்தி ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் ரூ. 2.66 கோடிக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் ரூ. 2.66 கோடிக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு 9,710 மூட்டைகள் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், பருத்தி கிலோ ரூ. 74.37 முதல் ரூ. 80.66 வரையில் ஏலம் போயின. மொத்தம் 3,513.23 குவிண்டால் பருத்தி ரூ. 2,66,55,648க்கு விற்பனையாயின என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தெரிவித்தாா்.