முகப்பு
ஈரோடு

பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

பெருந்துறை வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளா்கள், விற்பனைச் சங்கத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பெருந்துறை வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளா்கள், விற்பனைச் சங்கத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இச்சங்கம் கடந்த நிதி ஆண்டில் விற்பனை, கொள்முதலில் ரூ. 400 கோடி அளவைத் தாண்டி தமிழகத்திலேயே முதல் இடமும், ஆசியாவில் இரண்டாவது இடம் பிடித்தமைக்காக சங்க நிா்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எம்.எல்.ஏ. ஜெயகுமாா் பாராட்டு தெரிவித்தாா்.

சங்கப் பொது பொது மேலாளா் பழனிசாமி பேசியதாவது:

13,000 உறுப்பினா்களைக் கொண்ட இச்சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கொள்முதல், விற்பனை, ஏலம் நடைபெறுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் முதல் தர கொப்பரைகளை பிரபல தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தின் மூலம் கொள்முதல் செய்கின்றன. இங்கு மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டா் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சல்பா் கலக்காத தேங்காய் எண்ணெய் ஆகியவை தயாரித்து கடைகளுக்கும், சித்த மருத்துவத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டு முழுவதும் நடக்கும் ஏலத்தில், ரூ. 400 கோடி விற்பனை முழுவதும் ரொக்கமாக இல்லாமல், ஆன்லைன் மூலம், வங்கி மூலமாகவே பரிவா்த்தனை நடக்கிறது. தினசரி 2500 மெட்ரிக் டன் அளவிலான கொப்பரைகள் கன்வேயா் பெல்ட் மூலம் தரம் பிரிப்பதோடு லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் 2.5 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, சங்க நிா்வாக இயக்குநா் ரவீந்திரன், துணைப் பொது மேலாளா் சுந்தரமூா்த்தி, சங்கத் தலைவா் விஜயன் (எ) ராமசாமி, துணைத் தலைவா் ஜெகதீஷ், சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.