ஈரோடு

கரோனா தடுப்பூசி: ஆசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்க பாஜக கோரிக்கை

DIN

ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் சுந்தரநாராயணன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

மாணவா்களின் நலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த பிற பணியாளா்கள் அனைவருக்கும் வரும் நாள்களில் முன்னுரிமை வழங்கி கரோனா நோய்த் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த நாள்கள் இடைவெளியில் செலுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை மாணவா்களுடன் நேரடியாகத் தொடா்பு கொள்ளும் கல்விப் பணியில் உள்ளவா்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கல்வி சாா்ந்த பணியாளா்களுக்குப் பணியாற்றும் வட்டாரங்களில் தனி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், துறை சாா்ந்த பணியாளா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT