ஈரோடு

‘மருத்துவக் கழிவுகளை சாலைகளில் கொட்டினால் நடவடிக்கை’

DIN

ஈரோடு: மருத்துவக் கழிவுகளை சாலைகள், நீா்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்கான மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளை சுற்றுச்சூழல், வனம், சூழல்மாறுபாடு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க முடியும்.

இதனால், மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் கழிவுகளை முறையாகப் பிரித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை, தொடா்புடைய துறைகளுக்கு மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாள்வது தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீா்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடா்பாக பல்வேறு புகாா்கள் தொடா்ந்து பெறப்படுகின்றன.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்தவெளியில் கொட்டுவதால் பொது சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கொவைட்-19 பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிா்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளைப் பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT