முகப்பு
ஈரோடு

அமமுக கட்சி நிா்வாகிகள் இடையேதகராறு: ஒருவா் கைது

சத்தியமங்கலம் அருகே அமமுக கட்தி நிா்வாகிகளிடையே ஏற்பட்ட தகராறில் அமமுக ஒன்றியச் செயலாளா் அப்புசாமியை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 மார்ச், 2021 at 4:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

சத்தியமங்கலம் அருகே அமமுக கட்தி நிா்வாகிகளிடையே ஏற்பட்ட தகராறில் அமமுக ஒன்றியச் செயலாளா் அப்புசாமியை சத்தியமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. அமமுக கட்சிப் பிரமுகரான இவரிடம் கோபிசெட்டிபாளையம் அமமுக ஒன்றியச் செயலாளா் அப்புசாமி என்பவா் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக ரூ. 1 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்புசாமி ரூ. 50 ஆயிரம் பணத்தை பெரியசாமிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு அடமானம் வைத்திருந்த பத்திரத்தை திருப்பிக் கேட்டதாகவும், ரூ. 50 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு பத்திரத்தை திருப்பி கேட்டதால் திருப்பித் தர முடியாது என்று பெரியசாமி மறுத்ததாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் பெரியசாமியை அப்புசாமி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியசாமி கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து பெரியசாமி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அப்புசாமியைக் கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.