ஈரோடு

அந்தியூரில் லாரி ஓட்டுநரிடம் ரூ. 1.58 லட்சம் பறிமுதல்

DIN

அந்தியூரில் லாரி ஓட்டுநரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 1.58 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சத்தி - பவானி சாலையில் மூங்கில்பட்டி தோ்தல் பறக்கும் படை அலுவலரா் முருகேசன் தலைமையில் வாகனச் சோதனை புதன்கிழமை நடத்தப்பட்டது. அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்குச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீரங்கன் மகன் சிவகுமாா் (30) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1,58,400 ரொக்கம் கொண்டு செல்வது தெரியவந்தது.

விசாரணையில், நாமக்கல் கோழிப் பண்ணையிலிருந்து உரத்துக்காக கோழிக் கழிவுகளை கா்நாடக மாநிலம், ஹெச்சடி கோட்டையில் விற்பனை செய்த பணம் எனத் தெரிவித்துள்ளாா். ஆனால், இதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அந்தியூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இளங்கோவனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT