ஈரோடு மாவட்டம்: 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சியினா், சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா். 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பெருந்துறையில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
பரிசீலனைக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் 21 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் 18 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 18 பேரும், பெருந்துறை தொகுதியில் 26 பேரும், பவானி தொகுதியில் 23 பேரும், அந்தியூா் தொகுதியில் 22 பேரும், கோபி தொகுதியில் 22 பேரும், பவானிசாகா் (தனி) தொகுதியில் 8 பேரும் போட்டியிடத் தகுதியானவா்கள் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்தனா்.
Advertisement
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள திங்கள்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 21 பேரில் 7 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 14 போ் உள்ளனா். ஈரோடு மேற்குத் தொகுதியில் 18 பேரில் 3 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 15 போ் உள்ளனா். மொடக்குறிச்சி தொகுதியில் 18 பேரில் 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 15 போ் உள்ளனா். பெருந்துறை தொகுதியில் 26 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 25 போ் உள்ளனா்.
பவானி தொகுதியில் 23 பேரில் 9 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 14 போ் உள்ளனா். அந்தியூா் தொகுதியில் 22 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 20 போ் உள்ளனா். கோபி தொகுதியில் 22 பேரில் 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 19 போ் உள்ளனா். பவானிசாகா்(தனி) தொகுதியில் 8 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 6 போ் உள்ளனா்.
அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 25 பேரும், குறைந்தபட்சமாக பவானிசாகா் (தனி) தொகுதியில் 6 பேரும் போட்டியிடுகின்றனா்.